நீ இல்லா!நிமிடம் சாகும்!
00:00
00:00
Embed Code (recommended way)
Embed Code (Iframe alternative)
Please login or signup to use this feature.

போறாளே!போறாளே!
அவ என்ன விட்டு போறாளே!
போறேனே!போறேனே!
நானும் உலகத்த தாண்டி போறேனே!

கண் கலங்கி காதல நினச்சு!
நானும் எங்கோ போறேனே!
நீ இல்லா இதயத்த நானும்
உன்னிடம் கொடுத்து போறேனே!

நிலவு கூட விடுஞ்ச பின்னே!
மறஞ்சே தான் போனதடி!
உன சுத்தி எம் மனசு!
நிழல் போல தொடருமடி!

என விட்டு பிரிஞ்சதுவே!
நீ கொடுத்த சாபமடி!
நீ இல்லா உலகத்துல!
இருப்பது கூட பாவமடி!

மழை பெஞ்சு முடியுமுன்னே!
மண் வாசம் போனதடி!
வெள நிலமா இருந்த நானும்!
தருசா தான் போனேனடி!

நீ இல்லா என் வாழ்க்க!
நூலறுந்த பட்டமடி!
நீ போன இடம் தேடி!
என் உசுரும் உனக்காய் நகருதடி!
போறாளே!போறாளே!
அவ என்னை விட்டு போறாளே!.......

வரிகள்: ஜோ ரெக்ஸ்
இசை: பாலுLicence : All Rights Reserved


X