எமது உபதேசத்தை…க் கேட்கும் நீங்கள் வாழ்ந்து காட்டவேண்டிய முறை

Embed Code (recommended way)
Embed Code (Iframe alternative)
Please login or signup to use this feature.

எமது (ஞானகுரு) உபதேசத்தைக் கேட்டவர்களும் படிப்பவர்களும் அனைவரும் குறைந்தபட்சம் அவரவர்கள் குடும்பங்களிலும் அவர்கள் குடும்பப் பற்றுள்ள நிலைகளிலும்
தன் குடும்பத்தில் முதலிலே
இந்த அன்பையும் பண்பினையும் பரிவினையும்
மகரிஷிகளின் அருளினையும் பெருக்கிக் கொள்ளுங்கள்.

அப்படிப் பெருக்க நேர்ந்தால் மற்றவர்கள் நம்மைப் பார்க்கும்போது நமது உணர்வுகள் அவர்களையும் நல்லவர்களாக மாற்றும்.

அதே சமயத்தில் நம் குடும்பத்தில் ஒற்றுமை என்ற நிலைகளில் செயல்பட்டால் நம் தெருவிலேயும் பண்பு கொண்ட நிலைகள் உருவாகும். நமது உணர்வுகள் அவர்களை மாற்றிட உதவும்.

மகரிஷிகளின் அருள் உணர்வுகளை அவர்களையும் நுகரச் செய்யலாம். அந்தப் பண்பையும் வளரச் செய்யலாம்.

நாம் இந்த உணர்வின் மூச்சலைகளை நீங்கள் பரவச் செய்யும்போது இது காற்றிலே கலக்கின்றது. நினைவுபடுத்தும்போது அவர்களுக்குள் இந்த உணர்வை ஊட்டும்போது அவர்களும் நுகர்கின்றனர். அவர்களையும் அறியாது இருளிலிருந்து மீளச் செய்ய முடிகின்றது.

ஆனால், நீங்கள் இதைத் தெரிந்து கொண்டு
நீங்கள் இதை அதிகமாகச் செய்து கொண்டு
உங்கள் குடும்பத்தில் பற்றை இழந்து செயல்பட்டால்
நீங்கள் பார்ப்போர் உங்கள் பேச்சுக்கும் செயலுக்கும்
உங்களிலே இழுக்கான உணர்வைத் தேடும் நிலை வரும்.

இதனால் உங்கள் பண்பை அழித்திடும் நிலையும், பண்பை மற்றவரிடத்தில் வளராத தன்மையும்தான் வரும்.

இதைப் போன்ற நிலைகள் எப்பொழுது நம்மையறியாது இயக்குகின்றதோ உடனடியாகத் திருத்தி வாழும் தன்மையும் நம் உடலுக்குள் வளராது தடுக்கும் சக்தியும் பெறவேண்டும்.

அதைத் தடுப்பதற்கு துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற்று பேரொளி என்ற உணர்வினை நாம் அறிந்திடும் ஆற்றலைப் பெருக்கி நமது உணர்வுகள் மற்றவரைத் தெளியச் செய்யும் உணர்வாக மாற்ற வேண்டும்.

ஆகவே, வீட்டிற்குள் கணவனும் மனைவியும் ஒன்றி வாழ்ந்திடும் நிலையும் குடும்பத்தில் குழந்தையினுடைய நிலைகள் பற்றும் பாசத்துடன் வாழ்ந்திடும் நிலையும் முதலிலே உருவாக்கிப் பழகுங்கள்.

கணவன் மனைவி ஒன்று சேர்ந்து வாழ்ந்தால் சொர்க்கலோகம்.
கணவன் உணர்வு மனைவியைக் காக்கும்,
மனைவியின் உணர்வு கணவனைக் காக்கும்.

யாம் சொல்லும் இந்த முறைப்படி தியானித்தால் எதிர்பாராத தீமைகள் வராது தடுக்கும் சக்தி உங்கள் இருவருக்கும் உண்டு.

கணவன் மனைவிக்குள் அறியாது வரும் சிறு குறைகளாக இருந்தாலும் கணவன் மனைவிக்கு அந்த அருள் சக்தி பெறவேண்டும் என்றும் மனைவி கணவனுக்கு அந்த அருள் சக்தி பெறவேண்டும் என்று இப்படி இணைந்து வாழ்கும் பக்குவ நிலைகளை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

ஆகவே, இப்படி நீங்கள் வாழ்ந்து காட்டினால் உங்களைப் பார்க்கும்போது மற்றவருக்கும் அது தெளிவாகின்றது.

Licence : All Rights Reserved


X