Experience YourListen.com completely ad free for only $4 a month. Upgrade your account today!

யாதும் ஊரே! ஹம்…ாவின் குரலை'நினைத்தாலே இனிக்கும்'!ஹம்ஸகீதம்

Embed Code (recommended way)
Embed Code (Iframe alternative)
Please login or signup to use this feature.
Tags: spbhamsa

யாதும் ஊரே; யாவரும் கேளிர் ! ஹம்ஸாவின் குரலை 'நினைத்தாலே இனிக்கும்'! :) ஹம்ஸகீதம்

புறநானூற்றுப் பாடலின் கருத்து:

எல்லா ஊரும் எம்முடைய ஊரே; எல்லா மனிதர்களும் எம்முடைய உறவினர்களே;
தீமையாயினும் சரி;நன்மையாயினும் சரி;அது பிறர் கொடுக்க வருவதில்லை.துன்புறுவதாயினும்-அத்துன்பத்திலிருந்து விடுபடுவதாயினும் சரி;அதுவும் பிறரால் நிகழ்வதில்லை. இவையெல்லாம் அவன் செய்த செயலின் எதிர்விளைவுதான்.அதாவது பழவினையின் பயன்தான்.
இறப்பு என்பதும் புதுமையானதன்று;அது முன்னரே முடிவுசெய்யப்பட்டதுதான்.வாழ்தல் இனிமையானது என்று எண்ணி நாங்கள் மகிழ்ச்சி கொள்வதில்லை.ஏனெனில் அது துன்பங்களுக்கு இடையே எப்போதாவது வந்து செல்வதுதான். வெறுக்கத்தக்க செயல்கள் நடைபெறும்போது நாங்கள் அவற்றைத் துன்பமென்று ஒதுக்குவதில்லை.ஏனெனில் அவற்றை நுகர்வதைத் தவிர வேறு வழியில்லைஎன்பதனால். ஆம்,பழவினை அத்துணை வலிமையானது.

4. மின்னி முழங்கிய வானம் மழைத்துளிகளை இடைவிடாது பொழிய,அதனால் கல்லிலே மோதிப் பேரொலியோடு வருகின்ற புதுவெள்ளப் பேராற்றில் அகப்பட்ட ஒரு புணை(மிதவை,ஓடம்) வெள்ளம் எங்கெல்லாம் செலுத்துமோ அங்கெல்லாம் அலைபுரண்டு திரியுமே அல்லால் தான்விரும்பிய இடத்தில் கரை சேர முடியாது.அதைப்போல அரிய உயிரானது பழவினை செலுத்தும் வழியிலேதான் செல்ல முடியுமேயன்றித் தனக்கென தனிவழியைத் தேடிச்செல்ல முடியாது என்பதை மேலோர்கள் காட்டிய வழியில் அறிந்து கொண்டுள்ளோம்.

அதனால்தான் நாங்கள் பெருமையிற் சிறந்தவர்களைப் போற்றுவதுமில்லை;கீழோரைத் தூற்றுவதுமில்லை.ஏனெனில் அவர்கள் பெரியோராக இருப்பதற்கும்,சிறியோராக இருப்பதற்கும் பழவினைதான் காரணமேயன்றி இவர்தம் முயற்சியோ-முயற்சி இன்மையோ காரணம் அன்று.இவர்கள் காரணர் அல்லர் என்றால் இவர்களைப் போற்றுவதும் தூற்றுவதும் எதற்காக? ஆதலின் எங்களுக்கு எதன்மீதும் – எவர்மீதும் வெறுப்புமில்லை;தனிப்பட்ட விருப்பும் இல்லை. இந்த மன நிலையில்தான் கூறுகின்றோம்;’எல்லா ஊரும் எம்முடைய ஊரே;எல்லா மக்களும் எம்முடைய உறவினர்களே’என்று.

கருத்துரை: பாவலர்மணி ஆ.பழநி-காரைக்குடி.

Licence : All Rights Reserved


X